5 நிமிடங்கள் போதும்:வெங்காயத்தின் மூலம் மருக்கள் எப்படி உதிர்கின்றது என்று பாருங்கள்.

0
15003

மருக்களைப் போக்க பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அது நிறைய பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.நம் முன்னோர்களோ பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வழிகளைப் பின்பற்றினார்கள். அது எந்த தழும்பும் இல்லாமல் மருக்களை உதிரச் செய்துவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம். ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்.

பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here