முட்டாள் என்று சொன்னதால் கல்யாணமான மூன்றே நிமிடத்தில் கணவரை விவாகரத்து செய்த மணப்பெண்!

0
210

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், குவைத்தை சேர்ந்த ஒரு புது மன தம்பதியினர் திருமணம் ஆகி வெறும் மூன்று நிமிடங்களில் விவாகரத்து செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குச் சிறிது காலம் ஆகும். அதற்குள் ஏற்படும் சர்ச்சரவுகளை ஆரம்பத்திலேயே தீர்க்காவிட்டால் அது விவாகரத்து வரை சென்று விடும். ஆனால்,குவைத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆன மூன்றே நிமிடத்தில் கணவனை விவாகரத்துச் செய்து அனைவரையும் அதிர்ச்சி மிரளவைத்துள்ளார்.

குவைத்தை சேர்ந்த ஒரு ஜோடி தங்களின் திருமணத்தைப் பதிவாளர் முன்னிலையில் நடத்தினர். திருமணத்தை அங்கீகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் போது மணமகன் பெண்ணை முட்டாள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த பெண் கணவரை அதே இடத்தில பரஸ்பர விவாகரத்து செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

மணப்பெண்ணின் முடிவிற்குப் பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.vதிருமணம் ஆன புதிதிலேயே மரியாதை கொடுக்காவிட்டால் கடைசி வரை இருக்காது என்று கூறி விவாகரத்து பெற உதவினார்கள். இது போன்ற சம்பவம் கடந்த ஆண்டு அகமதாபாத்திலும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here