300 கோடியில் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாய் தயாராகும் மஹாவீர் கர்ணா:புகைப்படங்கள் உள்ளே

0
302

300 கோடி ரூபாய் செலவில் விக்ரம் நடிப்பில் உருவாக்கவுள்ள மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் தற்போது நடித்து திரைக்கு வரவுள்ள கடாரம்கொண்டான் திரைப்படத்தின் இறுதிகடட வேலைகள் நிறைவடைந்துள்ள இந்த வேளையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளமை சீயான் விக்கிரமின் இரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் உருவாகப்போகும் இத் திரைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்க மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.இதேவேளை இப் பிரம்மாண்ட தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலர் முக்கிய காதாபாத்திரத்தில் தோன்றவுள்ளனர்.

இக் கதையில் கர்ணனாக நடிக்கவுள்ள விக்ரம்
இதுவரை கடாரம்கொண்டான் திரைப்பட வேலைகளை பிஸியாக இருந்ததால் அவர் தவிர்ந்த துணை நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் கடாரம்கொண்டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்”சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இந்த வாய்ப்பை உருவாக்கிந்த கடவுளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here