ஆண்களின் விரலை வைத்தே அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்பவர்கள் என்று கூறிவிடலாம்

0
150

ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்களின் விதியும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது நம்மை படைத்த கடவுளுக்கு மட்டும் தெரியும். ஆனால் நாம் அதை அறிந்துகொள்ள கடவுள் கொடுக்கும் சில வைப்புகள்தான் ஜாதகம், நாடி ஜோதிடம் போன்றவை. ஆனால் இவை இல்லாமல் நம் உடல் உறுப்புகளை வைத்தே நமது எதிர்காலம் என்ன? நம் குணாதிசியங்கள் என்ன? போன்றவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

அதைத்தான் சாமுத்திரிகா இலட்சணம் என்று கூறுவார்கள். நம் உடலில் இருக்கும் மச்சங்கள், ரேகைகள், உறுப்புகளின் நீளம் போன்றவற்றை கொண்டு நம் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ளலாம். குறிப்பாக ஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் குணம் என்ன அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள்? அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கண்டறிந்து விடலாம். இந்த பதிவில் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அவர்களின் விரல்களை வைத்து எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

1 ஆணின் குறியீட்டு விரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால் அவர்கள் வினோதமான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெண்களிடம் கடுமையாகவும், வன்முறையாகவும் நடந்துகொள்வார்கள். இவர்களது மனைவி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல வன்முறைக்கு ஆளாவார்கள்.

2 ஆண்களின் விரல்களின் முனை பருமனாக உப்பியிருந்தால் அவர்கள் திருடனின் குணாதிசயத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதும் மனைவியிடம் ரகசியங்களை மறைத்துக்கொண்டே இருப்பார்கள்

3 சுட்டு விரலும், மோதிர விரலும் ஒரே நீளத்தில் உள்ள ஆண்கள் மிகவும் வசீகரமானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக இவர்கள் இந்த வசீகரத்தை பெண்களை கவர பயன்படுத்துவார்கள். இவர்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.

4 நீளமான மோதிர விரல் கொண்ட ஆண்கள் ஆக்ரோஷமான சுபாவத்தையும், குழப்பமான மனநிலையையும் கொண்டிருப்பார்கள். இந்த மனநிலையால் இவர்களின் மனைவி மற்றும் திருமண வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்படலாம்.

5 உள்ளங்கைக்கு பின்புறமும், கை மூட்டு பகுதியிலும் அதிக முடி உள்ள ஆண்கள் மிகவும் துரதிஷ்டசாலியாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் கெடுதலிலே முடியும். மற்ற ஆண்களை ஒப்பிடும்போது இவர்களின் துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். எப்படி விரல்கள் ஆண்களின் கெட்ட குணங்களை சொல்கிறதோ அதேபோல அவர்களின் நல்ல குணங்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியும் கூறும்.

6 விரல்கள் முட்டிவரை தடிமனாக இருக்கும் ஆண்கள் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள், சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை முறை ராஜாவை போல இருக்கும். வாழ்க்கையின் அனைத்து ஆடம்பரங்களையும், வசதிகளையும் அனுபவிப்பார்கள். தன் மனைவியையும் ராணி போல பார்துக்கொள்வார்கள்.

7 ஆணின் கை ரேகை மணிக்கட்டில் இருந்து தொடங்கி சுட்டு விரல் வரை சென்றால் அவர்கள் பெரிய செல்வந்தராக வர வாய்ப்புள்ளது. விரல்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால் அவர்கள் சொந்த உழைப்பில் பல சொத்துக்களை வாங்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

8 ஆணின் விரல் எந்த ஏற்ற இரக்கமும் இல்லாமல் நேராக, கூராக இருந்தால் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். தன் புத்திகூர்மையால் தனக்கான செல்வத்தை எளிய வழியில் பெற கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் நேர்மை மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here