2018ஆம் ஆண்டிற்கான உலகின் உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்…!! இலங்கையின் நிலை என்ன தெரியுமா..?

0
78

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதைப் பொறுத்து 2018 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஜப்பான் பாஸ்போர்ட் மூலமாக அதிகபட்சமாக 190 நாடுகளுக்கு இலவச விசா சேவையில் பயணிக்கலாம்.சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால் 189 நாடுகளுக்கு இலவச விசா சேவையில் பயணிக்க முடியும்.

ஜேர்மனி, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் பாஸ்போர்ட்கள் மூலமாக 188 நாடுகளுக்கு இலவச விசாவில் செல்லலாம்.டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் பாஸ்போர்ட் இருந்தால் 187 நாடுகள் செல்ல முன்கூட்டியே விசா பெற வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆஸ்திரியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா பாஸ்போர்ட்கள் இருந்தால் 186 நாடுகளுக்கு இலவச விசா மூலம் பயணிக்கலாம்.பெல்ஜியம், கனடா, ஐர்லாந்து, சுவிஸ்ர்லாந்து பாஸ்போர்ட்கள் மூலம் 185 நாடுகளுக்கு நேரடியாகச் சென்று விசா பெற முடியும்.

அவுஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் மால்டா உள்ளிட்ட பாஸ்போர்ட் மூலம் 183 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

செக் குடியரசு மற்றும் நியூசிலாந்து பாஸ்போர்ட்கள் மூலம் 182 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.ஐஸ்லாந்து பாஸ்போர்ட் மூலமாக 181 நாடுகளுக்கு இலவச விசா மூலம் பயணம் செய்ய முடியும்.

ஹங்கேரி, மலேஷியா, ஸ்லோவேனியா இந்த நாடுகளின் பாஸ்போர்ட்கள் மூலம் 180 நாடுகளுக்கு நேரடியாக அங்குச் சென்று விசாவை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வரிசையில் இலங்கையின் பாஸ்போர்ட்டை கொண்டுள்ளவர்கள் விசா இன்றி உலகிலுள்ள 39 நாடுகளுக்குச் சென்றுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here