மன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெயர்ப் பலகை….!! அதிகாரிகள் பாராமுகம்…!

0
97

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குச் செல்லும் பெயர் பலகையில், மன்னாருக்கு கீழே அமெரிக்கா செல்லும் வழி என்று எழுதப்பட்டுள்ளது.இது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.குறிப்பாக அமெரிக்கா செல்பவர்கள் தேவையற்ற முறையில் வீசா மற்றும் விமானத்தைப் பயன்படுத்துகின்றார்கள். இதனை கவனிக்கவில்லையா என்று நக்கல் தொனியில் எழுதப்படுகிறது.

ஆனால், அரசாங்கம் அரச கரும மொழிகள் என்றும் ஒரு அமைச்சையே வைத்துக் கொண்டிருக்கிறது.இருப்பினும் இலங்கையின் பல பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் தவறான மற்றும் எழுத்துப் பிழைகளுடன் வைக்கப்பட்டிருப்பதனை காண முடிகிறது.அதன் இன்னொரு வடிவம் தான் வட பகுதியில் அமெரிக்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகும்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here