ஐபிஎல் போட்டியில் கபில் தேவ் விளையாடினால் அவருக்கு ரூ. 25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுப்பார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் கிர்க்கெட் போட்டியை பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 2019 ஐபிஎல் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று கோலாகலமாக நடந்தது.

கபில் தேவ்வுக்கு 25 கோடி:

பிஎல் ஏலம் குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், 1983 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ். அந்த அணியில் இடம்பெற்றிருந்த கவாஸ்கர் கூறும் போது, “ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கபில் தேவ் தற்போது போட்டியிட்டால், அவர் 25 கோடிக்கு வாங்கப்படுவார் .

1983 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175* ரன்கள் கபில் தேவ் விளாசியது இன்றும் நினைவிருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர்ராக இன்றும் கபில் தேவின் அந்த அபார சதத்தை வியந்து பார்க்கிறேன். என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here