Seethakaathi: விஜய் சேதுபதி நடிப்பில் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் ஷோ – டுவிட்டர் விமர்சனம் எப்படியிருக்கு!

0
57

இயக்குநர் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் “சீதக்காதி”. முன்னதாக இருவரும் சேர்ந்து “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” என்ற படத்தை எடுத்திருந்தனர்.

சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25வது திரைப்படம். இப்படத்தில் முதியவர் வேடத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் கதைப்படி, தமிழ் நாடகக் கலையில் உச்சத்தில் இருந்தவர் அய்யா ஆதிமூலம்.

தன் கண் முன்னே நாடகக் கலை மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். இதற்கிடையில் குடும்பத்தின் பண நெருக்கடி ஏற்படுகிறது. இந்த சூழலில் ஒருநாள் நடித்துக் கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார்.

ஆனால் அவரது கலை இறக்கவில்லை. இதன்பிறகு நடக்கும் விசித்திரமான சம்பங்களே படத்தின் கதையாகும். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி குறைந்த நேரமே வருகிறார். இவருடன் அர்ச்சனா, மௌலி, மகேந்திரன், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் 3 மணி நேரம் வரை நீள்கிறது. சீதக்காதி திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், டுவிட்டரில் என்ன மாதிரியான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் என்பதை இங்கே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here