வெளிநாடு தப்பிச்சென்ற 58 பேரை இந்தியா கொண்டு வர திட்டம்

0
74

புதுடில்லி : விஜய் மல்லையா மட்டுமல்ல பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற மொத்த 58 பேரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தான் ஏமாற்றியதாக கூறப்படும் பணத்தை மீட்பதை விட, தன்னை இந்தியா அழைத்து வரவே மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக விஜய் மல்லையா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், வெளிநாட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி உள்ளிட்ட 58 பேரை இந்தியா கொண்டு வர இன்டர்போல் ரெட் நோட்டீஸ் அனுப்பி, நாடு கடத்தும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பார்லி.,யில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த விரிவான பதில் அறிக்கையில், இந்த 58 பேரை இந்தியா கொண்டு வர அரசு மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அமீரகம், இங்கிலாந்து, பெல்ஜியம், எகிப்து, அமெரிக்கா, ஆன்டிகுவே உள்ளிட்ட 16 நாடுகளிடம் நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here