அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் விவசாயி

0
67

ஐதராபாத் : தனது நிலத்தை மீட்பதற்காக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் பிச்சை எடுத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி மன்யம் வெங்கடேஸ்வரலு என்ற ராஜூ (35). மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மாதவரம் கிராமத்தில் ராஜூவுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை, அப்பகுதி வருவாய் துறை அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு ராஜூவிடம் இருந்து பறித்து, அவரது உறவினர்களிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜூ, வருவாய் துறை அதிகாரியை அனுகிய போது, ஆவணங்கள் அனைத்தும் தயாராக உள்ளது எனவும், அவற்றை எந்த நேரத்திலும் மாவட்ட கலெக்டர் ராஜூவின் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும் நிலத்தை ராஜூவிடம் திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக ராஜூ குற்றம்சாட்டி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ராஜூ பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், நிலம் இருந்தால் மட்டுமே தன்னால் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் எனவும், நிலத்தை பெறுவதற்காக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நிதி அளிக்கும்படி பதாகைகளுடன் அவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கேட்ட போது, ராஜூன் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது. அவர் மீது அவதூறு வழக்கு தொடர போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டு உண்மை எனில் அவர் கோர்ட்டை நாடலாமே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here