தமது குழந்தைக்கு ஹிட்லர் எனப் பெயர் சூட்டிய பெற்றோருக்கு நடந்த கதி….!!

0
62

இன்றைக்கும் உலகம் முழுவதுமாய் சர்வாதிகாரத்தின் குறியீடாய் முன்னிறுத்தப்படக்கூடியவர் ஜெர்மனி நாஜிக்கட்சியின் தலைவர் ஹிட்லர்.

யூத மக்களுக்கு எதிராக பெரிய அளவிலான வன்முறைபோக்கினை கையாண்ட ஹிட்லர், ஒருசாரால் உறுதிமிக்க தலைவர், சிறந்த பேச்சாளர் என கருதப்பட்டாலும், பெரும்பான்மையோரால் அவர் சர்வாதிகாரம் மற்றும் எதேச்சதிகாரத்தின் குறியீடாய் முன்னிறுத்தவே படுகிறார்.அப்படியான ஹிட்லரின் பெயரை தங்களின் குழந்தைக்கு சூட்டியதன் காரணத்தினால், குழந்தையின் பெற்றோர் சிறைக்கு செல்ல நேர்ந்திருக்கிறது.தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனை சேர்ந்த 22 ஆடம் தாமஸ் – போர்ச்சுகீஸ் பெண்ணான 38 வயதான கிளாடியா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தங்கள் குழந்தைக்கு அடால்ஃப் ஹிட்லர் எனவும் பெயரிட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here