தனது வியத்தகு செயற்பாட்டினால் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான நாய்….!! குவியும் பாராட்டுக்கள்….!

0
61

பல்கலைக்கழகத்தில் நாய் ஒன்று, பட்டதாரியான சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அமெரிக்காவில் பிரிட்னி ஹாலே என்ற மாணவி வளர்க்கும் கிரிஃபின் என்ற நாய்க்கு, கிளார்க்ஸன் பல்கலைக்கழகம் கௌரவ டிப்ளமோ பட்டம் வழங்கியுள்ளது.கரோலினாவில் உள்ள கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் இணைந்து, பிரிட்னி ஹாலே முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு முதுகுத்தண்டு பிரச்சினை இருப்பதால், அவரால் எழுந்து நடக்க இயலாது.

எனவே, ‘கிரிஃபின்’ என்று பெயரிட்டு அவர் வளர்த்த நாய்க்கு பல்வேறு கட்டளைகளைக் சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார். அதன்படி காலை நேரத்தில் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல், பிரிட்னியின் செல்போனை எடுத்து வருதல், புத்தகத்தை எடுத்து வருதல் என அனைத்து பணிகளையும் கிரிஃபின் செய்து வந்துள்ளது.

அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்துக்கு பிரிட்னி வரும்போது அவரைப் பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் கிரிஃபின் செய்து வந்துள்ளது.

இதனைப் பாராட்டும் வகையில் பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில், கிரிஃபினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி கடந்த சனிக்கிழமை கிளார்க்ஸன் பல்கலைகழகம், அந்த நாய்க்கு கௌரவ பட்டம் வழங்கியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த பலர், தற்போது கிரிஃபினுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here