இலங்கையின் புதிய அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்பு….!!

0
170

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சற்று நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.இந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், தற்பொழுது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.30 மணிக்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தரவில்லையென தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் மொத்தமான 33 அமைச்சுப் பதவிகள் நியமிக்கப்படவுள்ளன. ஜனாதிபதிஇ பிரதமர் தவிர்ந்த 28 உறுப்பினர்கள் இன்றைய தினம் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

33 பதவிகளில் ஏனைய 5 பதவிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்ட அரசியல் புரட்சி காரணமாக அரசாங்க செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்திருந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here