யாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி…. நாளை முதல் புத்தம் புதிய ரயிலில் குதூகலப் பயணம்…!!

0
74

கொழும்பிலிருந்து நேற்று மாலை யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது.இந்த ரயில் நாளை வெள்ளிக்கிழமை முதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த தொடருந்து இலங்கை தொடருந்து திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம்-கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகுப்பும் நீளமானதாக அமைந்துள்ளதுடன் முதலாம் வகுப்பில் தானியங்கி கதவு, குளிரூட்டி, தொலைக்காட்சி, மற்றும் USB வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தற்பொழுது தொடருந்தில் இலத்திரனியல் வேலைப்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் 28ஆம் நாளிலிருந்து தனது முதலாவது பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here