“காக்கி” இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு காக்கி நிறம் நியாபகம் வருகிறேதா இல்லையோ இந்த நிறத்தில் சீருடை அணியும் போலீசார் கண்டிப்பாக உங்கள் நினைவிற்கு வருவார்கள். போலீசார் காக்கியை தங்களது கவுரவமாக கருதுகின்றனர். இப்படியான காக்கிச்சட்டை போலீசாருக்கு எப்படி சீருடையானது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

போலீசாருக்கு காக்கி நிற சீருடை பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளாக போலீசாருக்கு காக்கி நிற சீருடைதான் வழங்கப்படுகிறது. இந்த காக்கி நிறம் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்றும் இருக்கிறது.

1847ம் ஆண்டு தான் போலீசாருக்கு காக்கி நிற சட்டை வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர்களுக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு நிற சீரூடை எனும் வகையில் நீல நிறம், இளநீல நிறம் பல இடங்களில் வெள்ளை நிறமும் வழங்கப்பட்டது.

ஆனால் போலீசார் மழை, வெயில், தூசு, புழுதி என எல்லா இடங்களில் சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இடங்களில் அவர்கள் பணியாற்றும் போது அதிகமாக அவர்களது உடை அழுக்காகிறது. இதனால் பெரும்பாலான போலீசார் அழுக்கு நிறைந்த ஆடைகளுடனேயே பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
புதிய கருத்துகளுக்கு
true. dirty color is possible from tea leaf one found that is great indeed.
guru bala
0 | 0 | 0 சிறந்தது |பதில்எல்லா கருத்துகளும் கருத்துரை எழுதவும்

போலீசாரை கண்டாலே பொதுமக்களுக்கு ஒரு வித மரியாதை ஏற்பட வேண்டும் என்பது பிரிட்டிஷ் காரர்களின் எண்ணம் ஆனால் இவ்வாறாக அழுக்கான ஆடைகளை அணிந்து பணியாற்றுவது அவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்த பெரும் தடையாக இருந்தது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள போலீசாருக்கு ஏற்ற சீருடையை தயார் செய்ய அப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கான பணியை ஹாரி லேம்மின்டன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

அவர் முதலில் 1846ம் ஆண்டு போலீசாருக்கு கருநீல நிறத்தில் சீரூடையை வழங்கினார். ஆனால் அதுவும் பெரிய அளவிற்கு பலன் தரவில்லை. போலீசார் தொடர்ந்து அழுக்கு நிறைந்த ஆடைகளுடனேயே இருந்து வந்ததாககூறப்படுகிறது.

அதன் பின் அப்பொழுது துணியில் அழுக்கு படியும் போது ஏற்படும் நிறத்திலேயே சீரூடை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த காலங்களில் அந்த அளவிற்கு சரியாக நிறத்தில் துணிகளுக்கு நிறமூட்டும் சாயம் செய்யும் தொழிற்நுட்பம் இல்லை.

இதன் பின் அந்த நிறத்தில் சாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின் தேயிலைகளை வைத்து சரியாக காக்கி நிறத்தில் சாயம் தயார் செய்யப்பட்டது. அதன் மூலம் உருவாக்கப்பட்ட துணிகள் கொண்டு போலீசாருக்கு சீருடை வழங்கப்பட்டது.

அந்த சீருடை அணியப்பட்ட பின்பு அழுக்கு படியும் பிரச்னை ஏற்படவில்லை என்பதால் இந்தியா முழுவதும் காக்கி நிற சீருடையே போலீசார் சீருடையாக 1847ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1845ம் ஆண்டு பிரிட்டிஷ் போலீசார் கொல்கத்தா போலீஸ் துறையை உருவாக்கியது. அப்பொழுது அவர்களுக்கு வெள்ளை நிற சீருடை வழங்கப்பட்டது. அதன் பின் 1847ல் ஹாரி காக்கி நிறத்தை போலீசாரின் சீருடையாக அறிவிக்கப்பட்டபோது கொல்கத்தா போலீசார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் இருப்பதால் காக்கி சரியாக இருக்காது என அதற்கு காரணம் சொல்லப்பட்டது. இருந்தாலும் சரியான காரணம் விளக்கப்படவில்லை.

அதனால் கொல்கத்தா தவிர மற்ற பகுதிகளில் காக்கி நிற சீருடை அமலுக்கு வந்தது. அதன் பின் 1861ல் மேற்கு வழங்க மாநிலத்திற்கான போலீஸ் துறை உருவாக்கப்பட்டது அப்பொழுது அவர்களுக்கு காக்கி நிற சீருடைதான் வழங்கப்பட்டது. கொல்கத்தா போலீசார் மட்டும் தொடர்ந்து வெள்ளை நிற சீருடையையே பயன்படுத்தி வந்தனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு போனாலும் அதன் பின் இன்று வரை அவர்கள் இயற்றிய சில சட்டங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் போலீசார் காக்கி சீருடையும் கொல்கத்தா போலீசாரின் வெள்ளை சீருடையும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

நீங்கள் இன்று கொல்கத்தாவிற்கு சென்றாலும் வெள்ளை சீருடை அணிந்த போலீசார்களை காண முடியும். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு சென்றாலும் அவர்கள் கொண்டு வந்த காக்கி சீருடை இன்னுமும் இந்தியாவிலேயே தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here