2019ல நாம எல்லாரும் 30 கோடி செல்போன்கள் வாங்கபோறாம்..!

0
67

இந்தியா இன்று உலகின் மொபைல் போன் விற்பனைக்கான சந்தையில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியாவில் மொபைல் போன் இல்லாதவர்களே இருக்க முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக 4ஜி மற்றும் ஜியோ வந்த பின்பு செல்போன்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் ஒரு மனிதனால் போன் பயன்படுத்தப்படும் நேரத்தின் அளவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து 2019ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 30 கோடியே 20 லட்சம் செல்போன்றகள் விற்பனையாகும் என கணக்கிட்டுள்ளனர். அவர்கள் நடத்திய ஆய்வின் படி கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை செல்போன்களை வாங்கியவர்கள் அதை மாற்றும் எண்ணம் ஏற்பட்டு இந்த காலகட்டத்தில் புதிய செல்போன்களை வாங்குவார்கள் என கணித்துள்ளனர்.

இது மட்டும் அல்ல 2019ல் இந்தியாவில் சுமார் 14 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனையாகும் எனவும், 5 கோடியே 50 லட்சம் ஸ்மார்ட் ஃபீச்சர்ஸ் உடைய போன்கள் விற்பனையாகும் எனவும், 9 கோடி சாதாரண போன்கள் விற்பனையாகும் என்றும் விற்பனையாகும் என்றும் கணித்துள்ளனர்.

மேலும் சியோமி,ஒன்பிளஸ், கூகுள், நோக்கியா, அசூஸ்,மற்றும் ரியல்மீ பிராண்டுகள் 2018ம் ஆண்டு சந்தித்த வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை சந்திக்கும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 2019ம் ஆண்டு விற்பனையில் சரிவை சந்திக்க நேரிடும் என்றும், சாம்சங், ஒப்போ, விவோ, ஹானர்-ஹவாய் போன்ற செல்போன்களின் விற்பனை இந்தாண்டில் இருந்ததை போல சராசரியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும், பயன்பாட்டாளர்கள், விற்பனையாளர்கள், ஒரிஜினல் பாகங்களின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் அளித்த தகவலை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here