ஆதார் எண் கேட்கும் வங்கிகளுக்கு ஒரு கோடி அபராதம்!

0
62

ஆதார் எண்ணை கட்டயமாக அளிக்க வேண்டும் என வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் அதன் ஊழியர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய தந்தித்துறை சட்டம் (Indian Telegraph Act) மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இச்சட்ட திருத்தங்கள் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்துவதை தடை செய்வதுடன் அதனை மீறினால் அந்நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்கிறது.

குறிப்பாக, KYC எனப்படும் வாடிக்கையாளர் விவரம் அறியும் விதத்தில் ஆதார் எண்ணை அளிக்குமாறு கேட்டக் கூடாது எனவும் இந்த சட்டதிருத்த மசோதா குறிப்பிடுகிறது. உச்சநீதிமன்ற நெறிமுறைக்கு உட்பட்டு அரசு பொது நல நோக்கில் ஆதார் எண்ணை இணைப்பைக் கோர அனுமதிக்கும் விதிவிலக்கும் உள்ளது.

ஆதார் அரசு செயல்பாட்டை மேம்படுத்த வசதியான சாதனம் என்றும் அதில் உள்ள பயோமெட்ரிக் பாதுகாப்பை உடைக்க முயன்றால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையை தவறாக பயன்படுத்த முயன்றால் ரூ.50 லட்சம் அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.

முறையான அறிவுறுத்தல் இல்லாமல் ஆதார் தகவல்களைத் பெற்றால் ரூ.10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு. இது க்யூ.ஆர். கோடு மூலம் செய்யும் சரிபார்ப்புக்கு ஆதாரை பயன்படுத்தற்கும் பொருந்தும். யாருடைய ஆதார் விவரத்தையோ புகைப்படத்தையோ வெளியிட்டாலும் ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here