விஸ்வாசம் படத்தில் அஜித் மட்டுமே அந்த விஷயம் செய்துள்ளார், தியேட்டர் எல்லாம் என்ன ஆக போகுதோ- படக்குழுவினர் ஓபன் டாக்

0
66

அஜித் பல கோடி ரசிகர்களின் நெஞ்சில் வாழும் ஒரு ஆசை நாயகன். இவரை சந்திக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் விருப்பம் தான், அவரும் தன்னால் முடிந்த அளவு வெளியில் செல்லும் போது ரசிகர்களை பார்த்தால் புகைப்படத்திற்கு அனுமதி அளித்து அவர்களுடனும் பேசிவிட்டு செல்கிறார்.

அதுவும் விஸ்வாசம் படப்பிடிப்பில் தான் அஜித் ரசிகர்களுடன் அதிகம் புகைப்படம் எடுத்தார் என்றே கூறலாம்.

இப்படத்தில் இடம்பெறும் அடிச்சுதூக்கு பாடல் படப்பிடிப்பில் அஜித்திற்கு பின்னால் நடனம் ஆடிய குழுவினர் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் பேசும்போது, அடிச்சுதூக்கு பாடலில் கடைசி BGMக்கு அஜித் தனியாக நடனம் ஆடியிருப்பார், நாங்களே நேரில் அசந்து பார்த்தோம், அது ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக இருக்கும் என்றனர்.

இதைக்கேட்ட அஜித் ரசிகர்கள் தியேட்டர்லாம் என்ன ஆகப்போகுதோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here