இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான iPhone XR இனை அறிமுகம் செய்திருந்தது.சிறிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களோடு அறிமுகமான இக் கைப்பேசிகள் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.எனினும், இக் கைப்பேசிகளை மேலும் வடிவமைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிள் நிறுவனத்திற்கு Foxconn மற்றும் Pegatron ஆகிய நிறுவனங்களே ஐபோனை அசெம்பிள் செய்து கொடுகின்றன.இந்நிறுவனங்கள் iPhone XR கைப்பேசியினை அசெம்பிள் செய்வதை நிறுத்தவுள்ளதாலேயே ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.Foxconn நிறுவனமாது iPhone XR கைப்பேசியினை வடிவமைப்பதற்கு ஆரம்பத்தில் 60 அசெம்பிளி லைன்களை கொண்டிருந்த போதிலும் தற்போது 45 ஆக குறைத்துள்ளது.

இதன்படி மேலும் 100,000 iPhone XR கைப்பேசிகள் மாத்திரமே வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here