பிரித்தானியாவின் Stourbridge பகுதியில் குடியிருந்த 29 வயதான கிறிஸ்டினா அபொட்ஸ் என்பவரே வாடிக்கையாளர் ஒருவரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வெளியிட்ட தகவல்கள், அவரது பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாக பெற்றோரை நம்ப வைத்துள்ள கிறிஸ்டினா ரகசியமாக, ஒருமுறைக்கு 2,000 பவுண்டுகள் வசூலிக்கும் பாலியல் தொழிலாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.இவரது முக்கிய வாடிக்கையாளரான 47 வயதான ஸாஹித் நசிம் என்பவரையே கொலை வழக்கு தொடர்பில் தற்போது பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகளின் தொழில் தொடர்பில் தமக்கு எந்த தகவலும் தெரியாது எனக் கூறும் தந்தை மைக்கேல் அபொட்ஸ், அவர் அதிக பயணங்கள் மேற்கொள்பவர் எனவும்,அவருக்கு செல்வந்தர்களுடன் நட்பு உள்ளதாகவும், பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் எனவும் மிகவும் வெள்ளந்தியாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால், கிறிஸ்டினா தமது பெயரை Tilly Pexton என மாற்றிக்கொண்டு பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25 ஆம் திகதி, தனது பிறந்த நாளுக்கென்று Park Plaza ஹொட்டலில் அறை பதிவு செய்துள்ளார் கிறிஸ்டினா.அன்றைய தினமே கிறிஸ்டினா கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். தலையில் மட்டும் 13 காயங்கள் இருந்துள்ளது.

கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதின் அடையாளங்களும் இருந்துள்ளது.மேலும், அதே அறையில் சுய நினைவை இழந்த நிலையில் வங்கி அதிகாரியான 47 வயது ஸாஹித் நசிம் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் தொடரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here