இன்றிரவு பதவியேற்கும் புதிய அமைச்சரவை…? மனோ கணேசனின் அதிரடித் தீர்மானம்….!!

0
62

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.இன்று காலை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேசிய அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இல்லாத போது, அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இருக்க வேண்டும்.இதன் காரணமாவே மலிக் சமரவிக்ரம மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவையில், கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த பலர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here