ஐயப்பனை தரித்துவிட்டுதான் திரும்புவோம்: சபரிமலை நோக்கி 30 சென்னை பெண்கள்

0
61

என்ன தடை வந்தாலும் அதைக் கடந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசித்தே தீருவோம் என சென்னையைச் சேர்ந்த பெண்கள் 30 பேர் சபரிமலை நோக்கி பயணிக்க உள்ளனர்.

ஐயப்பனை தரித்துவிட்டுதான் திரும்புவோம்: சபரிமலை நோக்கி 30 சென்னை பெண்கள்
சென்னையைச் சேர்ந்த 30 பெண்கள் கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். 35 முதல் 40 வயது வரை உடைய அவர்கள் மனிதி என்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

டிசம்பர் 22ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பும் இவர்கள் மறுநாள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

“சபரிமலை ஐயப்பனை பெண்களும் தரிசிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அங்கு செல்லும் பெண்கள் எதிர்ப்பாளர்களால் திரும்பி வந்துகொண்டிருப்பது வருந்ததக்கதாக உள்ளது. யார் சொன்னது நாங்கள் போனால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று?” என உணர்ச்சிகரமாகக் கேள்வி எழுப்புகிறார் மனிதி அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான வசுமதி வசந்த்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின் சபரிமலை ஐயப்ப தரிசனத்துக்குப் போன 16 பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here