சிறு வயதிலேயே இறந்த மகள் நினைத்து பொது நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத பாடகி சித்ரா- மகள் நினைவாக அவர் செய்த காரியம்

0
80

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியவர் சித்ரா. இவரது ஒரே மகள் நந்தினி கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் விழுந்து மரணம் அடைந்தார்.

தன் குழந்தையின் நினைவால் பாடகி சித்ரா பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார்.

இப்போது கூட தனது மகளின் நினைவாக கேரளாவில் உள்ள பருமுலா என்ற பகுதியில் உள்ள ஒரு கேன்சர் மையத்தில் கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தது, அதில் கலந்து கொண்ட பாடகி சித்ரா தன் மகள் நினைத்து அனைவர் முன்பும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இது அங்கு இருந்தவர்களை மிகவும் கஷ்டப்பட வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here