கண்டி- யாழ் வீதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்து….!! ஹீரோவாக மாறி பல உயிர்களையும் காப்பாற்றிய உதவியாளர்…! குவியும் பாராட்டுக்கள்…..!!

0
66

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.குறித்த லொறியின் உதவியாளர் ஒருவரின் திறமையான செயற்பாடு காரணமாக இந்த அனர்த்தம் தவிர்கப்பட்டுள்ளது.கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் ஊடாக பயணித்த லொறியின் பிரேக் செயற்படாமையினால் பாரிய விபத்து ஏற்படும் அபாய நிலை காணப்பட்டது. பிரேக் இல்லாத லொறி நாவுல நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பல வாகனங்கள் மீது மோதுண்டு, தொடர்ந்து சென்றுள்ளது.அந்த வீதியால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்த ஏற்பட்டுள்ளது. எனினும் லொறியின் உதவியாளர் துணிச்சலாக செயற்பட்டு றொறியை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

லொறியின் பின்பக்க டயரில் பெரிய மரப்பலகை ஒன்றை வைத்து லொறி நகர்வதை தடுத்துள்ளார். இதன் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உதவியாளர் உடனடியாக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கவில்லை என்றால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேக் இல்லாத லொறியை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here