வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்க வாசல் திறப்பு; விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

0
61

வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து கோவில்களிலும் நேற்று மதியத்தில் இருந்தே தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே கோவில்களில் குவியத் தொடங்கினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களில் திறக்கப்பட்டது.

இதேபோல் புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்களில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை, அதாவது மோட்சம் அடையலாம் என்பது ஐதீகம். இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here