கசப்பான பாகற்காயில் உள்ள அபரிமிதமான நன்மைகள்!!

0
282

காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, நீர்ச்சத்து, புரதம், மாவு, கொழுப்பு, தாது உப்புகள், வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன.

நன்மைகள்:
1) பாகற்காய் பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.

2) பாகற்காய் ஒரு சிறந்த விஷ முறிவாக செயல்படுகிறது. பாகற்காய் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3) உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

4) கல் அடைப்பு மற்றும் மூல நோயை பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் குணமாகும். தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

5)கல்லீரலில் உள்ள வீக்கம், வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.

6) நீரிழிவு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். பாகற்காய் சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவையை நீங்கும்.

7) பாகற்காய் ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் வருவதைத் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here