கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்!!

0
621

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைஇலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன.

இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் மற்றும் கறிவேப்பிலை வெளி மருந்தாகப் பயன்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கீழே காணலாம்..

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது:

நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.

2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:

கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்க்தியினைக் உடலுக்குத் தருகின்றன. எனவே பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.

  • கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.
  • கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக இருக்க முடியும்.
  • கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.

3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு:

புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும். அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. நீங்கள் விரும்பினால ஒரு சிறிய கரண்டி கறிவேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்துப் பருக வேண்டும். மேலும் கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் கொனோரியா (Gonorrhea) நோய் போன்றவற்றை சுவாரஸ்யமாகவும் திறம்படவும் கையாள்கிறது. அதோடு கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கற்பினிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறாது.

4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:

கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் கொனோரியா (Gonorrhea) ஆகியவற்றைக் கடந்து, வலிகள், தலைச்சுற்று, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் தோய்ந்த மலநோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகின்றது. கறிவேப்பிலை இலைகளின் நன்மைகளும், செயல் திறனும் இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கின்றன. இதன் காரண்மாகத் தான் மேற்கூறிய நோய்களிலிருந்து விடுபடக் கறிவேப்பிலை உதவுகிறது.

5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது:

புற்று நோய்க்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகளில் முக்கியமானவை கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை (ஆங்கிலத்தில் கீமோதெரபி என்பர் – Chemotherapy) ஆகும். இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது பிற விளைவுகளையும் ஏற்படுத்த நேரிடலாம். வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை முறைகளால் ஏற்படும் பின் விளைவுகளில் மன அழுத்தம், முடி உதிர்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் வேதிச்சிக்கிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை எளிதில் குறைத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்று நோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொள்வது குரோமோசோம்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உடலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலவச கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் திறம்படத் தடுக்கிறது.

6) தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது:

கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), பாக்டீரியா எதிர்ப்பொருள் (Antibacterial) மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் (Anti-inflammatory) போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாகப் பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆகும்.

7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:

கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செய்ல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை றேபடுத்த நேரிடலாம். கண்களில் ஏற்படும் குறைபாடுகளில் குருட்டுத்தன்மை, பார்வை இழப்பு, மாலைக் கண் நோய் போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தக் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளைக் கறிவேப்பிலை குறைக்கவும் மேலும் முற்றிலுமாகக் குணம் பெறவும் கூட உதவுகிறது. இதனால் கறிவேப்பிலை இலைகளை அதிகம் உண்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

8) கல்லீரலைப் பாதுகாக்கிறது:

கல்லீரல் சேதமடைவதிலிருந்து கறிவேப்பிலையால் பாதுகாக்க முடியும். ஏனெனில் கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி உடன் கேம்ப்ரல்பல் (Camprefol ) என்னும் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் கல்லீரல் சுமூகமாகச் செயல்படுவதற்கு மிகவும் உதவி செய்கின்றன. இதனால் நாம் உண்ணும் கறிவேப்பிலை இலைகள் நம்முடையக் கல்லீரலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:

குறையடர்த்தி லிப்போ புரதம் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு கறிவேப்பிலை உண்பதானல் குறைக்கப்படுகிறது. கறிவேப்பிலை இலைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் உள்ளக் கொழுப்புச்சத்துகளின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது என்று ஆய்வு முடிவுகள் வெளியிடுகின்றன. இதன் பொருள் உடலில் குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு உருவாகுவது பெரிய அளவில் குறைக்கப்படலாம் என்பதாகும். கெட்ட கொழுப்பு உருவாகுவதற்குப் பதிலாக உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு அல்லது நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவி செய்கிறது. அதிலும் குறிப்பாகத் தமனித் தடிப்பு அல்லது தமனிக்கூழ்மைத் தடிப்பு

நோய் (Atherosclerosis) மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.

10) முடியை வலுவாக்குகிறது:

ஆண்கள், பெண்கள் போன்ற இருபாலருக்கும் முடியின் அடர்த்தி மெலிதல் மற்றும் இளநரைப் போன்றவற்றால் முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க‌ நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும்.

மேலும் தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள் தடுக்க உதவுகின்றன. எனவே கறிவேப்பிலை இலைகளை நன்றாக உணவில் சேர்த்துக் கொண்டு முடி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது.

11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது:

ஒரு வேளை உங்கள் குடும்பம் நீரிழிவு நோயினைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டிருந்தால் தினமும் நீங்கள் கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சமைக்காமல் கொதிக்க வைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டு வர முயற்சி செய்ய வேண்டும். கறிவேப்பிலை இலைகளை உணவிலும் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் சாறு நீரிழிவு நோயின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது. எனவே தொடர்ந்து கறிவேப்பிலை இலைச் சாப்பிடுவதால் நீரிழிவு நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

12) செரிமான மண்டலத்திற்கு நல்லது:

முற்காலத்திலிருந்து கறிவேப்பிலை இலைகள் செரிமானத்தை எளிதாக்கும் என்பது ஏற்கனவே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தக் கறிவேப்பிலை இலைகள் முறையாகக் கொழுப்பினை உறிஞ்சுவதற்கு உதவி செய்கின்றன. மேலும் செரிமானத்தை எளிதாக்குவதால் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடையை இழக்க கறிவேப்பிலை உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here