மன அழுத்தம் போக்க 5 சிறந்த வழிகள்!

0
552
  • நடைபயிற்சி : அலுவலகங்களில் (அ) பணியிடங்களில் ஏற்படும் மனஉலைச்சல்களை குறைக்க ஒரு எளிய வழி நடைபயிற்சி தான். ஆன்ம சுதந்திரத்தை பாழாக்கும் மனஅழுத்தத்தினை ஒரு தனிமையா நடைபயிற்சி போக்கிவிடும். அதேவேலையில் நெருங்கிய நண்பர் துணையுடன் செல்லும் நடைபயிற்ச்சியும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதினை மறுத்துவிட முடியாது. 
  • அழுத்தம் உண்டாக்கும் தின்பண்டங்களை கைவிடுங்கள் : நாம் உண்ணும் உணவு கூட நமக்கு மன அழுத்தத்தினை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா… 60 கலோரிக்கு குறைவாக இருக்கும் உணவு பொருட்களை உண்டால் அது மனஅழுத்தம் உண்டாகலாம். அதாவது நீங்கள் உண்ணும் நொறுக்கு தீனிகள் இனிமையாக இருந்தால் அது அழுத்தத்தினை உண்டாகும், அதேப்போல் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் பொருட்களை உண்டால் அது அழுத்தத்தினை குறைக்கும் என தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.
  • உடற்பயிற்சி : மனநிலை சோர்வாக இருந்தால், மனம் மட்டும் அல்ல உடலும் சோர்ந்துவிடும்… அதற்காக படுக்கையிலேயே ஓய்ந்து விடாதிர்கள். வெளியே வந்து தூய்மையான காற்றில் ஆசுவாசப்படுங்கள். குறிப்பாக புத்துணர்சி தரும் உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் புத்துணர்வின் அளவு 360 டிகிரியினையும் தாண்டிச் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்… உடற்பயிற்சி என்றது உங்கள் உடலுக்கான ரீசார்ஜ்!
  • யோகா ஒரு சிறந்த நண்பன் : மனதொய்வில் இருந்து விடுப்பட அற்புதமான வழி யோகா ஆகும். மன ஊக்கத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஊக்கத்திற்கு யோகா வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதோடு ஒரு அமர்வுக்குப் பிறகு நிம்மதி அளிக்கும் பெருமை யோகாவிற்கு உண்டு.
  • சிறு இடைவெளி : தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திர வாழ்க்கைக்கு ஒரு இடைவெளி கொடுங்கள்… இது வரவிருக்கும் மனஅழுத்தத்தினை குறைக்கும். மேற்கூறிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம், அதனை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு முன்னெச்சரிக்கையாக செயல்படுவதும் முக்கியம். எனவே பிரச்சனை வருவதற்கு முன்னதாகவே அதில் இருந்து விடுப்படலாமே…. ஏனெனில் ‘வருமுன் காப்பதே சிறந்தது!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here