அஜித்துடன் மீண்டும் மெஹா படம் வெங்கட்பிரபு அதிரடி.!

0
253

அஜித்- வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா என்று ஒரே ஒரு படம் உருவானாலும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நின்று பேசும் அளவிற்கு அமைந்துவிட்டது. இதனாலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று வெங்கட் பிரபுவை தல ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவரிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க அதற்கு அவர், மங்காத்தா-2விற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் பயமும் உள்ளது. அதை பண்ணலாமா வேண்டாமா என தெரியவில்லை.

ஆனால் அவருடன் இன்னொரு படம் கண்டிப்பாக இருக்கிறது. அது கூடிய விரைவில் நடக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here