சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr. லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1-ஆம் நாள் வெளியாகும் !

0
88

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் ‘Mr. லோக்கல்’. சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியில் உருவாகிவரும் இத்திரைப்படம், இந்த ஜோடியின் முந்தைய படமான ‘வேலைக்காரன்’ படத்தைப் போல் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது. நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட, சிவகார்த்திகேயன் நடிப்பில் சில காட்சிகள் இன்னும் மீதமுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் மொத்தப் படப்பிடிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் மே 1-ஆம் தேதி படம் திரையை எட்டும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு நிறைய சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1-ஆம் தேதி இந்தப்படத்தை வெளியட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here