சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணியில் இருந்து மேலும் 3 பேர் புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக்க பண்டாரநாயக்க, ஆகியோர் கட்சி தாவியிருந்தனர்.இந்நிலையில், இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க, பைசர் முஸ்தபா ஆகியோர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேலும் மூவர் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தில் இணையவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here