பூட்டை உடைக்க முயற்சி, போலீஸ் தடுத்து நிறுத்தம் : விஷால் கைது

0
18

சென்னை : தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள தயாரிப்பாளர்கள் சிலர், நேற்று சென்னை, தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இன்று(டிச.,20) தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். 

இந்நிலையில், காலை 11 மணிக்கு பூட்டை உடைக்க விஷால் தலைமையிலான நிர்வாகிகள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விஷால் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பூட்டை உடைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக விஷால் அறிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here