சென்னை:அண்ணா பல்கலை தேர்வு வினாத்தாள் லீக் ஆனது குறித்து தனியார் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரி கிருஷ்ணனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
டிசம்பர் 3 ல் அண்ணா பல்கலை கணித தேர்வு நடந்தது. இதில் வினாத்தாள் லீக் ஆனது குறித்து அப்பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் வெங்கடேஷன் போலீசில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லுாரிகளி்ல் 2016ல் படித்த மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் வினாத்தாளை லீக் செய்தது தெரிந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு ஊழியர் மூலம் வினாத்தாளை பெற்று, பகிர்ந்துள்ளதால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here