ஏமன் போர் நிறுத்தம் தோல்வி

0
18

சனானா : மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் ஏமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று இரவு முதல் ஹுடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களும், ஏமன் அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சண்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்று மக்கள் நம்பினர்.

ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் ஹுடைடாவில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்தன. கிழக்கு ஹுடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமத

மடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here