இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…!!

0
20

தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.66 வயதாகும் புட்டின் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் லியுத்மிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, 2014 ஆம் ஆடு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மரியா, கத்ரீன என இரண்டு மகள் உள்ளனர்.இந் நிலையில் மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புட்டின், நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.ஆனால், அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். இதற்கிடையே புட்டினுக்கும், ரஷ்ய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here